தஞ்சை காளி இரத்த வங்கியில் தனக்கும் இதே நிலை ஏற்பட்டதாக அதிரை வழக்கறிஞர் முஹம்மது தம்பி புகார்

Editorial
0
அதிரை கடற்கரைத் தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மனைவிக்கு  அதிரை ஷிபா மருத்துவமனையில் மகப்பேறு நடைபெற இருந்தது. இவருக்கு A1 பாசிட்டிவ் வகை இரத்தம் தேவைப்பட்டுள்ளது. இதற்காக சாகுல் ஹமீது தஞ்சையில் உள்ள தனியார் இரத்த வங்கிக்கு தொடர்பு கொண்டு இரத்தம் உள்ளதா என கேட்டுள்ளார். போனை எடுத்து பேசிய இரத்த வங்கி ஊழியர், அதிராம்பட்டினம் என்றவுடன் இரத்தம் இல்லை என்கிறார். அதற்கு சாகுல் ஹமீதோ, தன்னிடம் இரத்த தானம் செய்யும் DONORகள் இருவர் உள்ளதாக கூறுகிறார். அதற்கு பதிலளித்த இரத்த வங்கி ஊழியர் தங்களிடம் இரத்தம் சேகரிக்கும் பை இல்லை எனக்கூறிவிட்டு சாகுல் ஹமீதுவின் தொலைப்பேசி விபரங்களை கேட்டுவிட்டு போனை துண்டித்தார்.

இதனால் சந்தேகமடைந்த சாகுல் ஹமீது, தனது நண்பரை மீண்டும் அதே இரத்த வங்கிக்கு தொடர்பு கொண்டு அதே வகை இரத்தம் கேட்க சொல்கிறார். அதற்கு இரத்த வங்கி ஊழியர் எந்த ஊர் என்று விசாரிக்க இம்முறை சோதனைக்காக வல்லம் என்கிறார் சாகுல் ஹமீதின் நண்பர். தங்களிடம் இரத்தம் இருப்பதாக கூறும் அந்த ஊழியர் மருத்துவமனையின் அனுமதி பெற்றவுடன் இரத்த சேகரித்து செல்லலாம் என்கிறார். 

அந்த ஆடியோ...

தஞ்சை காளி இரத்த வங்கியில் இதே போன்ற ஒரு சம்பவத்தை தான் அண்மையில் எதிர்கொண்டதாக அதிரையை சேர்ந்த வழக்கறிஞர் முஹம்மது தம்பி நமது அதிரைபிறைக்கு தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியுள்ள பிரத்யேக வீடியோ...

தஞ்சை காளி இரத்த வங்கிக்கும் அதிராம்பட்டினத்துக்கும் நீண்ட தொடர்பு உண்டு. நமதூரில் இயங்கும் பன்னாட்டு NGOக்கள் விளம்பரத்துக்காக நடத்தும் இரத்ததான முகாம்கள் பெரும்பாலானவை இந்த இரத்த வங்கி  இணைந்து இருக்கும். இதே போல் இயக்கங்கள், தெரு முஹல்லாக்கள் இரத்ததான முகாமின் உள் அரசியல், பொருளாதார நோக்கம், பாதிப்புகள் பற்றி அறியாமல் நண்மை செய்வதாக நினைத்துக் கொண்டு தவறாக நடத்திய இரத்ததான முகாம்கள் பலவும் காளி இரத்த வங்கியுடன் இணைந்து நடத்தப்பட்டவை.

அதிரையில் கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறு நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான இரத்ததான முகாம்களின் மூலம் காளி இரத்த வங்கிக்கு அதிரை மக்களின் பல ஆயிரம் யூனிட் இரத்தம் கிடைத்து உள்ளது. இதை வைத்து வருமானம் ஈட்டி வரும் காளி இரத்த வங்கி அதிரை மக்களுக்கே துரோகம் செய்யும் வகையில் நடந்துள்ளது.

கொரோனாவை இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்தி மதவெறியர்கள் பரப்பிய வதந்தியால் பல மருத்துவமனைகளில் இஸ்லாமியர்களுக்கு பிரசவம் போன்ற அவசர சிகிச்சைகள் மறுக்கப்படுகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது குணமடைந்து வரும் தப்லீக் ஜமாத்தினரின் இரத்தத்தை சேகரித்து பிளாஸ்மாவை எடுத்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இதுபற்றி கிஞ்சித்தும் சிந்திக்காத காளி இரத்த வங்கி போன்ற மருத்துவ நிறுவனங்கள் இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு இரத்தம் கொடுக்கவும், அவர்களின் இரத்தத்தை சேமிப்புக்காக தற்போது பெற மறுக்கவும் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.

இரத்ததான முகாமின் பின்னணியில் மிகப்பெரிய அரசியலும், பொருளாதார ஆதாயமும் இருக்கிறது. இதனை எளிமையாக நடத்தி நமது இரத்தத்தை உறிஞ்சி இதுபோன்ற தனியார் இரத்த வங்கிகளுக்கு வழங்கி விட்டு, புகழ்பெற விரும்பும் போலி சமூக ஆர்வலர்கள், NGO-க்கள் இதுபற்றி தங்கள் அமைப்பின் சார்பில் வழக்கோ தொடருமா..? குறைந்தபட்சம் கண்டனமாவது தெரிவிக்குமா என்று பார்ப்போம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...