அதிரை பள்ளிவாசல்களுக்கு வந்தது அரசின் நோன்புக்கஞ்சி அரிசி

Editorial
0
ஆண்டுதோறும் ரமலான் மாதம் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் அந்தந்த பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சி வினியோகிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 அதற்கு மாற்றாக அரசு தரும் அரிசியை மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ரமலான் மாதம் தொடங்கி 5 நாட்களாகியும் அரிசி வராததால் ஏழைகளுக்கு அரிசி பிடித்துக் கொடுத்த படாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று அரசின் நோன்புக்கஞ்சி கான அரிசி அதிராம் பட்டினம் பள்ளிவாசல்களுக்கு  வந்தடைந்தது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...