இந்த நிலையில் இன்று அதிரையில் சஹர் நேரத்தில் சரியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அதிரை துணை மின் பொறியாளரிடம் அதிரை பிறை சார்பாக விசாரித்தபோது துவரங்குறிச்சி மதுக்கூர் இடையே உள்ள மின்சார லைன் மீது தென்னை மட்டை விழுந்ததால் பழுது ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதனைத் தொடர்ந்து மின்சாரம் வந்ததால் மக்கள் ஆறுதல் அடைந்தனர். அதிராம்பட்டினத்தை பொருத்தவரை ரமலான் மாதத்தில் மற்ற நேரத்தைக் காட்டிலும் சஹர் மற்றும் இஃப்தார் நேரங்களில் மின்தடை ஏற்படுவதை தவிர்க்க அதிரை மின்சார வாரியம் முன்வரவேண்டும் என்பதே அதிரை மக்களின் கோரிக்கையாக உள்ளது.
அதேபோல் ஆங்காங்கே ஏற்படும் மின் பழுதுகளால் அண்மைக்காலமாக நீண்ட நேர மின்தடை மற்றும் அடிக்கடி குறுகியகால மின் தடை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுகின்றன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வெயில் காலத்தில் நோன்பு வைத்துக்கொண்டு மக்கள் வீடுகளில் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் மின் பழுதுகளை சீரமைத்து தடையில்லா மின்சாரம் வழங்க அதிரை மின்சார வாரியம் முன்வர வேண்டும் என அதிரை பிறை சார்பாக வலியுறுத்துகிறோம்.