ரமலான், கண்ணியமான சிறப்புமிக்க மாதம். இது இஸ்லாமியர்களுக்கு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
வழக்கமாக ரமலான் மாதம் வந்த உடனேயே நமதூர் களைக் கட்டிவிடும். இதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னரே பல பள்ளி வாசல்களை புணரமைக்கப்பட்டு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
நல் அமல்களாலும், பிரார்த்தனையாளும், நோன்பாளிகளுக்கு தயார் செய்யப்படும் உணவுகள் என மாதம் முழுவதுமே பள்ளி வளாகம் களைக்கட்டியே இருக்கும்.
-
புதிய அனுபவங்கள்:
இது வரை நாம் கடந்து வந்த ரமலான் மாதங்களை விட இந்த ஆண்டு பல வித்யாசமான அனுபவங்கள் நம்மை கடந்து செல்லவிருக்கிறது.
மூடப்பட்ட பள்ளி வாசல்கள், ஐவேலை & தராவீஹ் தொழுகைகள் பள்ளியில் தொழ முடியாத சூழல், தொடர்ந்து தொழில் நிறுவனங்கள் இல்லாததால் வருமானம் ஈட்டுவதில் பிரச்சனைகளை வியாபாரிகள் சந்தித்து அவரவர் பொருளாதாரம் சற்று பின்னோக்கும் அபாயம், நோய் தொற்று இருப்பதாக கூறி பல குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழல் என, இதுவரை நாம் கண்டிராத பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த ரமலான் மாதத்தை நாம் அடைந்துள்ளோம்.
இது போன்ற அசாதாரண சூழலில் இருந்து மீள்வதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
- அதிரை சாலிஹ்