தஞ்சை மாவட்டத்தில் இன்று 26.04.2020 முழு ஊரடங்கினை அமல்படுத்தியதை தொடர்ந்து அதிரையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
ரமலான் மாதம் என்பதால் நோன்பு திறப்பதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டுகளில் பள்ளிவாசல்களில் இலவசமாக நோன்பு கஞ்சி காய்ச்சி விநியோகம் செய்தனர். இந்த ஆண்டு கொரோனா காரணமாக இதனை கைவிடப்பட்டது. இந்த ஆண்டு கடைகளில் விலை கொடுத்து வாங்கி வந்த பொதுமக்களுக்கு இன்று நடைமுறைப்படுத்த முழு ஊரடங்கு நோன்பாளிகளுக்கு மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.
நோன்பாளிகள் பயன்பெறும் வகையில் அரசே மாற்று ஏற்பாடுகள் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வந்து ஹோட்டல் உணவை நம்பி இருந்தவர்களுக்கு பெரும் அடியாய் அமைந்துள்ளது இந்த முழு ஊரடங்கு.
இனி வரும் காலங்களிலாவது முழு ஊரடங்கு இல்லாமல் சமூக இடைவெளியுடன் வழக்கம் போல் அங்காடிகள் இயங்க வழி வகுத்தால் நோன்பாளிகளுக்கு அரசு செய்யும் பெரும் உதவியாய் இருக்கும். இது பல ஏழைகளின் வயிற்றை நிரப்பவும் உதவும்.