எப்படி இருந்த நான் - இப்படி ஆகிட்டேன் : அதிரை!

0
ரமலான் மாதம் என்றாலே அதிரையின் பள்ளி வாசல்கள் வியாபார அங்காடிகள் என கடந்த ஆண்டுகள் வரை செழிப்பாக காணப்பட்ட நமதூர் தற்போது நிலவும் சூழலால் சற்று மந்தமாகவே காணப்படுகிறது. பள்ளி வாசல்கள் மூடப்பட்டதே இதற்கான முக்கிய காரணம். 

அதிலும் முக்கிய பங்கு வகித்தது பள்ளி வாசல்களில் விநியோகம் செய்யப்பட்டு வந்த நோன்பு கஞ்சி.

தூக்கு வாளிகள் பிசியாக இருந்த காலம் மாறி அசாதாரண சூழலினால் மேற் கூறிய பல இடங்களில் கூட்டங்கள் கூடுவதில்லை. இதனால் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

அசருடைய நேரம் வந்தால் பள்ளி வாசல்களில் காய்ச்சப்படும் நோன்பு கஞ்சி மணம் ஊரே மணக்கும் ஆனால் இந்த ஆண்டு தூக்கு வாளிகளுக்கு விடுமுறை அளித்தது போல் நோன்பு கஞ்சி வழங்குவது தடைபட்டு போனது. 

சென்ற ஆண்டு வரை ஆஹா ஓஹோ என எப்படி இருந்த ஊர் இன்று உலமாக்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டும், அரசின் வேண்டுகோளுக்கும்  இணங்கியும் இப்படி அமைதியாகி போனது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...