சாலையோரம் கிடந்த பயன்படுத்தப்படாத பேனர்கள் மட்டுமின்றி பெரும்பாலான கடைகளில் விளம்பரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வந்த பேனர்களையும் பேரூராட்சி ஊழியர்கள் தங்கள் அனுமதியின்றி எடுத்துச் சென்று தடுப்புகள் அமைத்ததாக அதிரை வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட பேனர்களை தடுப்புகளுக்காக மட்டும் பயன்படுத்தாமல் வேறுசில காரணங்களுக்காகவும் பேரூராட்சி பயன்படுத்தி வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நம்மை தொடர்பு கொண்டு பேசிய ஒரு வியாபாரி தனது கடையில் வைக்கப்பட்டு இருந்த இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிலான பேனரை பேரூராட்சி ஊழியர்கள் அனுமதியின்றி எடுத்துச்சென்று தடுப்புகள் அமைப்பதற்கு பதிலாக குப்பை ஏற்றிச்செல்லும் டிராக்டர் கன்டெய்னரில் தடுப்புக்காக பயன்படுத்துவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றார். ஏற்கனவே ஊரடங்கு உத்தரவால் எந்தவித வருமானமும் இன்றி தவித்து வரும் பெரும்பாலான கடை உரிமையாளர்களுக்கு இது கூடுதல் சிரமத்தையும் செலவையும் ஏற்படுத்தியுள்ளது.