ஊரடங்கு காலத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்து வெளியூர்களுக்கு மருத்துவம் போன்ற அவசரத் தேவைக்காக செல்ல முடியாமல் பலர் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபோன்றவர்களுக்கு உதவ ஈ பாஸ் எனப்படும் ஆன்லைன் அனுமதிச் சீட்டு பெற்று வெளியூர் செல்லும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இதுகுறித்து பலருக்கும் தெரியாத காரணத்தால் அவசரத் தேவைகளுக்கு கூட செல்லாமல் ஊரிலேயே பலர் முடங்கியுள்ளனர். எனவே இதை எப்படி விண்ணப்பிப்பது என்பதை அதிரை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அதிரை பிறை இந்த வழிகாட்டு பதிவை வெளியிடுகிறது.
நீங்கள் செய்ய வேண்டியது...
1. இதற்கு விண்ணப்பிக்க பயணிப்பவரின் ஆதார் அட்டை அல்லது வேறு அரசு அடையாள ஆவணம் (Documents) தேவைப்படும்.
2. விண்ணப்பித்தவருடன் ஒன்று அல்லது இரண்டு நபர்கள் செல்லலாம். அவர்களின் வயது மற்றும் தொலைபேசி எண் மட்டும் இருந்தால் போதுமானது.
3. அவர்கள் செல்லக்கூடிய வாகனத்தின் பதிவு எண் (registration number) தெரிந்திருக்க வேண்டும்.
4. இந்த இணையதள லிங்கை கிளிக் செய்து https://serviceonline.gov.in/tamilnadu/directApply.do?serviceId=721
விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
5. பிறகு உங்கள் தொலைபேசி எண்ணிற்கு இரண்டு குறுஞ்செய்திகள் வரும்.
7. இரண்டாவது குறுஞ்செய்தியில் உங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா என்பது பற்றிய தகவல் வரும்.
8. அனுமதி வழங்கப்பட்டதாக இருந்தால் நீங்கள் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு பயணம் செய்யலாம்.
- அதிரை பிறை