தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை(26.04.2020) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும், தவிர்க்கமுடியாத காரணங்களைத் தவிர வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, "உலகளாவிய நோய் தொற்று பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு பச்சை, நீலம் மற்றும் ரோஸ் வண்ணங்களில் அனுமதி அடையாள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. அதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வர முடியும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த அட்டைகளை பயன்படுத்த முடியாது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை(26.04.2020) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் எனவும், தவிர்க்கமுடியாத காரணங்களைத் தவிர தேவையில்லாமல் வீட்டைவிட்டு
வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(26.04.2020) எந்த அடையாள அட்டைக்கும் அனுமதி கிடையாது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைபிடிக்கப்படும். குடிநீர், பால் மற்றும் மருத்துவத் தேவைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை தடை காலம் நடைமுறையில் இருக்கும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு கொரோனா தொற்று சமூக பரவலாக ஆவதை தடுத்திட இந்த நடைமுறையை பின்பற்றி ஒரு சில அசெளகரியங்கள் இருந்தாலும் ஒத்துழைப்பு நல்க மாவட்ட நிர்வாகம்
கேட்டுக்கொள்கிறது.
மேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838(வாட்ஸ்அ ப்), 04362 - 271695, 1077(கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்." என்றார்.