இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ளது அல் ஜாமியுல் அல்ஃபார் மஸ்ஜித். இதனை சம்மாங்கோடு பள்ளி என்றும் சிவப்பு பள்ளி என்றும் அழைப்பவர்களும் உண்டு. 1908 ஆம் கட்டப்பட்ட இப்பள்ளிவாசல் இலங்கையின் வரலாற்றுச்சிறப்புமிக்க கட்டிடங்களில் ஒன்று. இதன் முகப்புத்தோற்றம் இலங்கை தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதில் அதிரை மக்களாகிய நாம் மகிழ்ச்சி அடையக்கூடிய விசயம் என்னவென்றால் இப்பள்ளியை கட்டியது அதிரையை சேர்ந்தவர்கள்.
பண்டைய காலத்தில் அதிரையிலிருந்து வர்த்தகர்கள் இலங்கைக்குப் படகில் சென்று வந்துள்ளனர் என்பதும், அப்போது கடலிலிருந்து வெகுதூரத்தில் மேற்கண்ட சம்மாங்கோடு பள்ளி கம்பீரமாகத் தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வஃபாத்தான அதிரையை சேர்ந்த மு.அ.முஹம்மது அப்துல்லாஹ் ஆலிம் அவர்கள் காத்தான்குடியில் உள்ள அல் மதர்ஸத்துல் ஃபழாஹ் அரபிக் கல்லூரியின் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிவப்பு பள்ளியை விளக்கும் வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Advertisement