அதிரையில் 12 பள்ளிவாசல்களில் நிதி பற்றாக்குறை

Editorial
1 minute read
0

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழுகை, இதர வழிபாடுகள் நடத்தப்படாததாலும், கடைகள் அடைக்கப்பட்டதாலும் இமாம், மு அத்தின்களுக்கு ஊதியம் வழங்கக்கூட நிதியின்றி அதிரை பள்ளிவாசல் நிர்வாகங்கள் தவிப்பதாக கடந்த 25-ம் தேதி அதிரை பிறையில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்த நிலையில், அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் ஒரு கோரிக்கை வைத்துள்ளது. அதாவது சம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட்ட 12 பள்ளிகளில் வருமானம் இன்றி நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அனைவரும் உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் உதவிகோரும் பள்ளிவாசல்களின் வங்கி கணக்குகளையும் சம்சுல் இஸ்லாம் சங்கம் வெளியிட்டு உள்ளது.

பள்ளிவாசல்களுக்கு நிதியுதவி வழங்குபவர்கள் வெளிநாட்டு கணக்குகளில் இருந்து செலுத்தாமல் இந்திய கணக்குகளில் இருந்து உதவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பு: இந்த படத்தில் உள்ள பள்ளிகளில் எல்லாம் இந்த பிரச்சனை உள்ளது என்று அர்த்தமில்லை. இந்த பதிவுக்கு தொடர்பான படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக மட்டுமே இதனை ஒரு அடையாள படமாக வெளியிடுகிறோம். யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்.

Post a Comment

0Comments
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...